விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எள் தனைப்பொழுது ஆகிலும்*  என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்* 
    தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்*  தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
    கட்டியை*  கரும்பு ஈன்ற இன் சாற்றை*  காதலால் மறை நான்கும் முன் ஓதிய 
    பட்டனை*  பரவைத் துயில் ஏற்றை*  என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் மனத்து அகலாது - என் மனத்தைவிட்டுப் பிரியாமல்
என்றும் - எக்காலத்திலும்
இருக்கும் - என் மனக்தே யிருக்கையினாலாகிய
புகழ் - கீர்த்தியையுடையவனும்
தட்டு அலர்த்த - தட்டுப்போலே விகஸிப்பிக்கப்பட்ட

விளக்க உரை

“ஒருமா நொடியும் பிரியான்” என்னுமாபோலே க்ஷணகாலமும் என்னெஞ்சை விட்டுப்பிரிகிறதில்லை யென்னுமிதுவே காரணமாகப் பெரும்புகழோங்கப் பெற்றவனும் திருமாலிருஞ் சோலையில் பரமபோக்யமாக ஸேவை ஸாதிப்பவனும் கருப்பஞ்சாறு போலே ரஸமயனாயிருப்பவனும்? க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபிநி யென்னுமோர் அந்தணன் பாடே நான்கு வேதங்களையு மோதிப் பாண்டிதயம் பெற்றவனும் திருப்பாற்கடலிலே துயில் கொள்பவனும் தனது திருக்குணங்களை யெல்லாம் என்னை யநுபவிப்பித்தவனுமான திருநறையூர் நம்பியைத் திருக்குணங்களை யெல்லாம் என்னை யநுபவித்துவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து மற்றொருவனையும் பாடமாட்டே னென்கிறார். எள் + தனை, எட்டனை; மிகச்சிறிய அளவுக்கு எள்ளை உவமை கூறுவதுண்டு; க்ஷண காலமும் என்றபடி.

English Translation

High reputed Sugar-Lord who resides in my good heart and never leaves for a moment! Lord of sweetness like the cane-sugar-juice and resident of Tiru-Maliurmsolai! -where the kongu trees shower golden-hue petals, Over the Lord who is the Master of Vedas-four, Praising him who is fond of deep ocean, my god tongue does not sing of another, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்