விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது*  அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து 
    தாங்கு*  தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை*  உம்பர்க்கு அணி ஆய் நின்ற*
    வேங்கடத்து அரியை பரி கீறியை*  வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட 
    தீங் கரும்பினை*  தேனை நன் பாலினை அன்றி*  என் மனம் சிந்தை செய்யாதே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆங்கு வெம் நரகத்து - அப்படிப்பட்ட கொடிய நரகங்களிலே
அழுந்தும் போது - அழுந்தி நோவுபட நேர்ந்தகாலத்து
அங்கே வந்து - அவ்விடங்களில் வந்து
அஞ்சேல் என்று - பயப்படவேண்டாவென்று
அடியேனை தாங்கு - அடியேனைப் பாகாத்தருள்கின்ற

விளக்க உரை

பலவகைகளாலும் கனக்கப் பாவங்களைப்பண்ணி அவற்றின் பலன்களை யநுபவிக்க கொடிய நரகங்களிலே சென்று நோவுபடுங்கால், ‘தான் பண்ணின பாவங்களின் பலனைத் தான் அநுபவிக்கட்டும்; நமக்கு வந்ததென்ன?’ என்றிராமல் அங்கே யெழுந்தருளி ‘நாம் இருக்க நீ பாபங்களின் பலனை அநுபவிக்க ப்ராப்தியுண்டோ? அஞ்சாதே’ என்று அபயப்ரதானம்பண்ணி ரக்ஷித்ருளு மெம்பிரானையே என்மனம் சிந்திக்கின்ற தென்கிறார். நரகத்திலே அழுந்தும்போது அங்கே வந்து தாங்குவதாகச் சொல்லுகிற விதற்குக் கருத்து என் எனில்;? * தென்னவன் தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து பின்னும் வன்கயிற்றால் பிணித்தெற்றிப் பின் முன்னாக விழப்பதாகிற யமதண்டனைகளை யநுபவித்துக் கொண்டிருக்கையில் எம்பெருமான் அங்கே வந்து காத்தருள்கின்றா னென்கிறதன்று; ‘ஐயோ! நாம் எல்லை யில்லாத பாவங்களைப் பண்ணிவிட்டோமே; வெவ்விய நரகங்களிலே சென்று கொடிய துன்பங்களை யநுபவிக்க நேருமே, என் செய்வோம்!’ என்று கவலைப்பட்டு வருந்தியிருக்கு மிருப்பிலே வந்து அபயப்ரதானம் பண்ணும்படியைச் சொன்னவாறு.

English Translation

When my soul suffers torment of hell and pain, there the Lord protects giving courage and succour. Feet of lotus hue, worshipped by gods above. And hand that raised says, "Fear not, I am with you", He's the Lord of cool venkatam, Kesi-foe, He's the child who ate butter and was tethered then, He's my Lord sugar-cane-like and honey, milk, He alone resides forever in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்