விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நல் நீர் வயல் புடை சூழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கல் நீர மால் வரைத் தோள்*  கலிகன்றி மங்கையர்கோன்*
    சொல் நீர சொல்மாலை*  சொல்லுவார்கள் சூழ் விசும்பில்- 
    நல் நீர்மையால் மகிழ்ந்து*  நெடுங் காலம் வாழ்வாரே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ல் நீர் வயல் புடை சூழ் நறையூர் – நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில்
நின்ற – நித்யாவஸம் செய்தருள்கின்ற
நம்பியை – எம்பெருமான் விஷயமாக,
கல் நீர மால் வரை தோள் – ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும்
மங்கையர் கோன் – திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான

விளக்க உரை

கல்நீர = ‘நீர’ என்றது நீர்மையை (ஸ்வாபத்தை) யுடைய என்றபடி. ‘நீர்மை’ என்னும் பண்புப் பெயரில் ஈறுபோயிற்று; அ – குறிப்புப் பெயரெச்ச விகுதி. ‘சொல் நீர’ என்பதிலும் இங்ஙனமே கொள்க. சொல் – கொண்டாடிச் சொல்லப்படுவதை, நீர – இயற்கையாகவுடைய என்றபடி. “இத்தை யநுஸந்தித்தார்க்கு ‘இதொரு சப்தமே!’ என்று கொண்டாடு மிதுவே ஸ்வபாவமாம்படியிருக்கிற சொல்தொடையை’ என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி.

English Translation

The generous as-the-raincloud Mangai-king-Kalikanri has sung this song-garland as offering to the Lord who resides in Naraiyur surrounded by watered groves and fields. Those who master it will live in great joy on Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்