விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம் தாதை தாதை அப்பால்*  எழுவர் பழ அடிமை 
    வந்தார்*  என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*
    அந்தோ! என் ஆர் உயிரே!*  அரசே அருள் எனக்கு* 
    நந்தாமல் தந்த எந்தாய்!*  நறையூர் நின்ற நம்பீயோ!* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் ஆர் உயிரே – எனது அருமையான உயிர் போன்றவனே!
அரசே – என்னை ஆள்பவனே!
எனக்கு அருள் நந்தாமல் தந்த எந்தாய் – என் திறத்தில் கிருபையைக் குறைவின்றிச் செய்தருளின எம்பெருமானே!
எம் தாதை தாதை – நானும் என் தகப்பனும் அவன் தகப்பனும்
அப்பால் – அவனுக்கு முன்புண்டான
எழுவர் – ஸப்த புருஷர்களும்

விளக்க உரை

தாம் அனேக வம்ச பரம்பரையாகப் பகவத் விஷயத்திலே தொண்டு பட்டிருக்கும்படியை முதலடியில் வெளியிடுகிறார். நம்முடையவர்கள் இதையொரு ஏற்றமாகச் சொல்லிக் கொள்வதுண்டு; “ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்” “எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பனேழ்படிகால் தொடங்கி வந்து வழிவிழயாட் செய்கின்றோம்” இத்யாதிகள் காண்க. நான், என்னுடைய தகப்பனார், அவருடைய தகப்பனார், அவர்க்கு அப்பால் எழுவர் என்றிப்படி பாரம்பரியமாக அநந்யார்ஹ சேஷத்வத்தில் ஊன்றியிருப்போம் நாம்; இப்படி அடிமைச்சுவடு நன்கறியப் பெற்றிருக்கிற அடியேன் என்னெஞ்சினுள்ளே வந்து சேர்ந்திருக்கிற தேவரீரை இனி வேறிடம் போகவொட்டுவேனோ? என்கிறார்.

English Translation

O Lord, Master of my father, and his father's fathers four! Having come to live in me, how now can I let you go? O My precious soul and monarch, you gave me your grace in full. O My father-mother-Lord, Naraiyur Lord-in-residence, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்