விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து*  என்னை உள்ளம் கொண்ட- 
    கள்வா! என்றலும்*  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*
    உள்ளே நின்று உருகி*  நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்* 
    நள்ளேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து – ‘ஹம்ஸரூபியாயும் வராஹ ரூபியாயும் என்னுள்ளே பிரவேசித்து
என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும் – என உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட கள்வனே!’ என்று சொன்னவுடனே
என் கண்கள் – எனது கண்களில் நின்றும்
நீர்கள் சோர்தரும் – கண்ணீர் பெருகுகின்றது :
ஆல் – அந்தோ!;

விளக்க உரை

எம்பெருமான் ‘பிறப்பிலி’ என்று பேர் பெற்றிருக்கச் செய்தேயும் என்றும் என்றும் “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தா யிமையோர் தலைவா!” என்றுமு் சொல்லுகிறபடியே பலவகைப்பட்ட யோநிகளிலும் பிறந்தருளுகிறான்; நாம் கருமத்தாலே பிறக்கிறோம், அவன் கருணையாலே பிறக்கிறான் என்னுமிவ்வளவே வாசி. அப்படி பிறந்தருளிநின்றாலும், சிறந்தவையென்று கொண்டாடப்படுகிற தேவமநுஷ்ய யோநிகளிலே பிறக்குமளவோடு நிற்கலாகாதா? மிக்க இழிவான பசு பக்ஷி யோநிகளிலும் வந்து பிறக்க வேணுமா? இப்படியும் ஒரு நீர்மையுண்டோ? என்று சிந்தித்து நெஞ்சு உருகவும் கண்கள் பனிமல்கவும் பெற்றேன்; ஆச்ரிதர்க்குக் காரியஞ்செய்யவேணுமென்று திருவுள்ளத்தில் தோன்றிவிட்டால் ஜந்ம நிகர்ஷங்களையும் கணிசியாதே எந்தப் பிறவியில் வேணுமானாலும் மனமுவந்து பிறந்தருள்கின்ற உன்னையல்லாது வேறொருவரை நேசிக்க மாட்டேன்; இப்படிப்பட்ட திருக்குணங்களைத் திருநறையூரி லெழுந்தருளியிருக்கு மிருப்பிலே விளங்கக் காட்டிக்கொண்டு என்னை அடிமை கொள்ளப் பெறுவதே! என்று உள்குழைந்து பேசுகிறாராயிற்று.

English Translation

You came as a boar and bird and took my lowly heart as yours. Even as I say, "You stealer!" my eyes rain with tears, alas! When I think you my heart is filled with passion, O alas! No more can I wish again Naraiyur Lord-in-residence, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்