விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூயாய்! சுடர் மா மதிபோல்*  உயிர்க்கு எல்லாம்* 
    தாய் ஆய் அளிக்கின்ற*  தண் தாமரைக் கண்ணா!*
    ஆயா! அலை நீர் உலகு ஏழும்*  முன் உண்ட 
    வாயா*  உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தூயாய் – பரிசுத்தனானவனே!
சுடர் – ஒளிவிடுகின்ற
மா மதி போல் – பூர்ண சந்திரன் போலே
உயிர்க்கு எல்லாம் – ஸகலப்ராணிகளுக்கும்
தாய் ஆய் அளிக்கின்ற – தாய்போன்று அருள்புரிகின்ற

விளக்க உரை

தூயாய்! என்று திருவுள்ளத்திலுள்ள பரிசுத்தியைச் சொன்னபடி. அநுகூலர் பிரதிகூலர் என்னும் பாசிபாராதே எல்லார் திறத்திலும் நன்மையையே சிந்திக்கையாகிற திருவுள்ளத் தூய்மையை யுடையவனே! என்றபடி. இப்படியாகில், கம்ஸ சிசுபால ராவணாதிகளைக் கொன்றது ஏனென்னில்; விளக்கிலே விட்டில் பூச்சிகள் விழுந்து முடியுமா போலே அவர்கள் விழுந்து மாண்டு போனவளவால் எம்பெருமானது திருவுள்ளத்தூய்மைக்கு ஒரு குறையுண்டோ? அவர்களும் அடிபணிந்து வாழ்ந்து போகவேணு மென்று இவன்தான் செய்த க்ருஷிகளுக்கு எல்லையில்லையே. (சுடர்மாமதிபோல் இத்யாதி.) பூர்ணசந்திரன் ஸகலதாபங்களையும் தணிக்குமாபோலே ஸகல ப்ராணிகள் விஷயத்திலும் தாய்போன்று குளிர அருள்செய்கின்ற திருக்கண்களையுடையவனே! “திங்களுமாதித்தியனு மெழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபமிழிந்தேலோ ரெம்பாவாய்” என்றது காண்க.

English Translation

O Pure-as-the-radiant-full-Moon! Mother to all the living souls! O Lotus-eyed protector! O Cowherd! O Lord who swallows the seven worlds! How can I ever forget you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்