விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கதியேல் இல்லை*  நின் அருள் அல்லது எனக்கு* 
    நிதியே!*  திருநீர்மலை நித்திலத் தொத்தே*
    பதியே பரவித் தொழும்*  தொண்டர் தமக்குக் 
    கதியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிதியே – நிதிபோன்றவனே!
திருநீர்மலை – திருநீர்மலையி லெழுந்தருளியிருக்கிற
நித்திலம் தொத்தே – முத்துமாலைபோன்றவனே!
எனக்கு – அடியேனுக்கு
நின் அருள் அல்லது – உன்னுடைய கிருபையைத் தவிர்த்து

விளக்க உரை

உன்னுடைய திருவருளைத் தவிர்த்து வேறொன்றும் எனக்குப் புகலாவதில்லை; எனக்கு வைத்தமாநிதியும் நீயே; திருநீர்மலை முதலான திருப்பதிகளில் ஸேவை ஸாதிப்பவனும் நீயே; *விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மண்ணகரம் மாமாடவேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை, சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே மதிட்கச்சியூரகமே பேரகமேயென்றிப்படி திவ்ய தேசங்களே யாத்திரையாகப்போவது போக்கித் திரியும் என்னோடொத்த பத்தர்கட்குக் கதியாயிருக்கும் பெருமானே! உன்னைக் கண்டுகொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேனென்கிறார். கதி – என்னும் வடசொல் விகாரம். நிதி – என்னும் வடசொல் விகாரம் திருநறையூர் நம்பிபக்கல் ஈடுபட்டுப் பேசுகிறவர் திருக்கோட்டியூர் திருமூழிக்களம் திருநீர்மலை முதலிய திருப்பதிகளைப் பேசுவதனால் – அந்தந்தத் திருப்பதிகளி லிருப்பை எம்பெருமான் இவர்க்குக் காட்டித் தந்தருளி ஆச்வஸிப்பிக்கிறானென்பது தோன்றும்.

English Translation

O My Wealth! Other than you, I have no refuge. O Peral necklace of Tirunirmalai, O Resident! O Life-breath of worshipful devotees! In seeing you my spirit has found its freedom.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்