விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பனி ஏய் பரங் குன்றின்*  பவளத் திரளே* 
    முனியே*  திருமூழிக்களத்து விளக்கே*
    இனியாய் தொண்டரோம்*  பருகும் இன் அமுது ஆய 
    கனியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பனி ஏய் – பனிமிக்கிருந்துள்ள
பரம் குன்றின் – சிறந்த ஹிமவத்பர்வதத்திலுள்ள திருப்பிரிதியி லெழுந்தருளியிருக்கிற
பவளம் திரளே – பவளங்கள் திரண்டாற்போன்று அழகியவனே!
முனியே – (அடியாருடைய நன்மைகளைச்) சிந்திக்குமவனே!
திருமூழிக் களத்து – திருமூழிக்களமென்னுந் திருப்பதியில்

விளக்க உரை

பனி மிகுந்திருந்துள்ள இமயமலையில் திருப்பிரிதியென்னுந் திருப்பதியிலே எல்லார்க்கும் விரும்பவுரியனாய்க் கொண்டு ஸந்நிதிபண்ணி யிருக்குமவனே! என்பது முதலடியின் கருத்து. இப்பெரிய திருமொழியில் இரண்டாந் திருப்பதிகத்தில் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற திருப்பதி இது. முனியே! – மநநம் பண்ணுமவனே! என்கை. இச்சேதநர் அறிந்த போதோடு அறியாதபோதோடு வாசியற எப்போதும் இவர்களுக்கு ஹிதத்தைச் சிந்திக்குமவனே! என்றவாறு. திருமூழிக்களத்து விளக்கே! – திருமூழிக்களத்திலே வந்து உன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களுக்கு நீயேப்ரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே! என்கை திருமூழிக்களம் – மனைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றனுள் ஒன்று; நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம். இனியாய்! – ‘இனியான்’ என்பதன் ஈறு திரிந்தவளி. ‘இனியாய தொண்டரோம்’ என்பது வழங்கிவரும் பாடம்; அதுவியாக்கியானத்திற்குச் சேராது.

English Translation

O Coral spring residing in the snowy peaks of the Himalayas! O Thinker! O Light of Tirumulikkalam! O Sweet ambrosia of devotees! O Fruit By seeing you my spirk has been set free.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்