விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள் வாய் பிளந்த*  புனிதா! என்று அழைக்க* 
    உள்ளே நின்று*  என் உள்ளம் குளிரும் ஒருவா!*
    கள்வா!*  கடல்மல்லைக் கிடந்த கரும்பே* 
    வள்ளால்! உன்னை*  எங்ஙனம் நான் மறக்கேனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புள் வாய் பிளந்த – பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்த
புனிதா – பரமபவித்திரனே!
என்று அழைக்க – என்று நான் கூப்பிட்ட வளவிலே
உள்ளே நின்று – என்னுள்ளே பொருந்தி
என் உள்ளம் குளிரும் ஒருவா – என் மனத்தில் தாபந்தணிக்க வல்ல அத்விதீயனே!

விளக்க உரை

- ‘விரோதிகளை நிரதஸிப்பதையே விரதமாகக் கொண்டவன் நீ’ என்றுணர்த்தும் திருநாமங்களை நான் வாயாரச் சொல்லவிரும்பிப் ‘புள்வாய் பிளந்தபுனிதா!’ என்றழைத்தேன்; அவ்வளவிலே நீ என்னுள்ளத்தே வந்து புகுந்து ஸ்தாவரப்ரதிஷ்டையாக நிலைத்து ஸகல தாபங்களையும் ஆற்றிக் குளிர்ச்சியை யுண்டாக்கினாய் என்கிறார் முன்னடிகளில். புனிதனென்றது பரிசுத்தனென்றபடி. விரோதிகளைக் களைந்தொழிக்க வேண்டில் அதற்கு வேறு யாரேனையும் ஏவிவிடாமல் தானே கைதொட்டுக் களைந்தமையாகிற பரிசுத்தியை நினைக்கிறது. (கள்வா!.) பிறர் அளியவொண்ணாதபடி காரியம் செய்பவனைக் கள்வனென்பது; எம்பெருமானும் ‘இராமடமூட்டுவாரைப் போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போருமவனாகையாலே கள்வனெனப்படுகிறான். கச்சிமாநகரிலுள்ள பல திவ்யதேசங்களுள் திருக்கள்வனூர் என்பது ஒரு திவ்யதேசம்; அவ்விடத்தெம்பெருமானது திருநாமம் கள்வன்; அவனை விளிக்கிறாராகவுமாம்; “ உலகமேத்துங் காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!” என்பர். திருநெடுந்தாண்டகத்திலும். ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் பேசும் பாசுரங்காண்மின் :– “பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று கூறாதே – மண்டலத்தோர், புள்வாய் பிறந்த புயலே! உனைக் கச்சிக், கள்வாவென்றோதுவதென்கண்டு.”

English Translation

O sweet Lord of Kadalmallai while I called "O pure one who tore apart the horse kesin's Jaws you stole my heart and took residence in it, filling me with joy! How can I ever forget your generosity?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்