விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கறவா மட நாகு*  தன் கன்று உள்ளினால்போல்* 
    மறவாது அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்*
    நறவு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பி* 
    பிறவாமை எனைப் பணி*  எந்தை பிரானே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உன்னையே அழைக்கின்றேன் – உன்னையே சொல்லிக் கூப்பிடா நின்றேன்;
எந்தை பிரானே – எனக்குத் தந்தையான பெருமானே!
எனை – என்னை
பிறவாமை – (இனி ஸம்ஸாரத்தில்) பிறவாதபடி
பணி – செய்தருளாய்.

விளக்க உரை

திருநறையூர்ப் பெருமானே! உன்னை இடைவிடாது அநுபவிப்பதற்கு அடைவூறான ஸம்ஸார ஸம்பந்தத்தைக் கழித்தருளாய் என்கிறார். கன்றுக்குட்டியானது தனது தாய்ப்பசு பால் சுரவாவிடில் அதனையே நினைத்துக் கதறுமாபோலே பேறு பெறாத அடியேன் ஓயாது உன்னையே சொல்லிக் கதறுகின்றேன்; இன்னமும் எத்தனை காலம் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து அநர்த்தப் படுவேன்? பட்டதெல்லாம் போதாதோ? இனி எனக்குப்பிறவி நேராதபடி கடாக்ஷித்தருளாய் என்றாராயிற்று.

English Translation

O Lord of Naraiyur surrounded by nectared groves! Like a calf constantly calling for its unmilked mother cow, I keep calling for you, Pray ensure that I am not born again.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்