விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பேய்ச்சி முலை உண்ணக் கண்டு*  பின்னையும் நில்லாது என்நெஞ்சம்* 
  ஆய்ச்சியர் எல்லாரும் கூடி*  அழைக்கவும் நான் முலை தந்தேன்*
  காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்* 
  வாய்த்த புகழ் மணிவண்ணா!*  மஞ்சனம் ஆட நீ வாராய்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆய்ச்சியர் எல்லாரும் - இடைச்சிகள் எல்லாரும்
கூடி - ஒன்று கூடி
அழைக்கவும் - கூப்பாடு போட்டுக் கதறவும்
நான் - (உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலைதந்தேன் - முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு - நெல்லியையிட்டு

விளக்க உரை

‘உனக்கு முலைகொடுத்த பேய்ச்சி பட்டபாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபடவேண்டி வரப்போகிறதே என்று அஞ்சி ஓடவேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல் உனக்கு நான் முலைதந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள். நெல்லி – நெல்லியிலை. காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது. கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித்தாது வடியாப் பிறந்த வினையெச்சம்.

English Translation

Even after seeing you suck the life out of Putana’s breast, my heart would not listen; I gave your suck, when all the milkmaids try to dissuade me. I have filled the bathtub with hot water, purified w

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்