விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெண்ணெய் அளைந்த குணுங்கும்*  விளையாடு புழுதியும் கொண்டு* 
  திண்ணென இவ் இரா உன்னைத்*  தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*
  எண்ணெய் புளிப்பழம் கொண்டு*  இங்கு எத்தனை போதும் இருந்தேன்* 
  நண்ணல் அரிய பிரானே!*  நாரணா! நீராட வாராய்  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெண்ணெய்  அளைந்த - வெண்ணெயளைந்ததனாலான
குணுங்கும் - மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும் - விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு - (உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்);
இஇரா - இன்றை இரவில்;

விளக்க உரை

கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க, விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையா

English Translation

You have putrid butter and the dirt of the playfield all over you; tonight I will definitely not let you go to sleep scrabbling yourself. How long have I waited for you with oil and soap nut powder! O

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்