விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார் காது தாழப் பெருக்கி அமைத்து*  மகரக்குழை இட வேண்டிச்* 
    சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்*  சிந்தையுள் நின்று திகழப்*
    பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்*  பன்னிரு நாமத்தால் சொன்ன* 
    ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்*  அச்சுதனுக்கு அடியாரே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அசோதை - யசேதையானவள்;
வார் - (ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற;
காது - காதுகளை;
தாழ - தொங்கும்படி;
பெருக்கி - வளர்த்து;

விளக்க உரை

வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி, அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது. சொற்றொடர் நிலைச்செய்யுள் பொருட்தொடர்நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை. “செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும். அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம், (நிவ வயகி, நிவ வதெவெத வ த) திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று, அடிவரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த,

English Translation

These twelve ‘Namas songs’ in Andadi style by world famous Puduvai king Vishnuchitta recalls the words lovingly spoken by Yasoda to the Lord Tirumal desirous of strectching his long ears with Makara

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்