விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்*  தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று* 
  கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்*  காணவே கட்டிற்றிலையே?*
  செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்*  சிரீதரா! உன்காது தூரும்* 
  கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற*  காரிகையார் சிரியாமே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சொல்லுவார் சொல்லை - சொன்னார் சொன்ன பேச்சுக்களையெல்லாம்;
மெய் என்று கருதி - (நீ) மெய்யென்றெண்ணி;
காண் - (பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி;
தொடுப்பு உண்டாய் - களவுகண்டு உண்டாய்;
என்று - என்று (என்மீது பழிசுமத்தி);

விளக்க உரை

கண்ணன் யசோதையை நோக்கி ‘உன்பேச்சை நம்பக் கூடாது; நீ சொல்லுவார் சொல்வதைக் கேட்டு என்னைத் தண்டிப்பவளன்றோ?’ என்ன; யசோதை ‘உன்னை நான் அப்படிச் செய்ததுண்டோ?’ என்ன கண்ணன் ‘இவன் வெண்ணெய் திருடினானென்று யாரோ சொல்ல அதை உண்மையென்று நம்பி என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுபோய் என்னை எல்லாரும் பார்த்துப் பரிஹஸிக்கும்படி உரலோடு கட்டவில்லையோ?’ என்று சிரித்து நிற்க யசோதை ‘நீ இப்படியெல்லாம் நான் செய்தவற்றைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தால் உன் காதுகள் தூர்ந்துவிடுமே; தவிரவும் உன் பக்கல் அன்பினால் உன்னை விட்டுப் போகமாட்டாமல் நிற்கிற இந்தப் பெண்கள் ‘சொணைக்காது கூழைக்காது’ என்று சொல்லி உன்னை ஏகாதபடி உன் காதைப் பெருக்க இத்திரியை யணிந்துகொள்ள வேணும்’ என்று மறுபடியும் திரியிடப் பார்க்கிறாள். சொல்லுவார் என்றது - கொள்ளத்தகாத பேச்சையுடையவர் என்ற கருத்தைக் காட்டும். தொடுப்பு - (ஒருவரையும் கேளாமல்) தொடுதல் ; எனவே களவாம்: ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர். கிடாய் - முன்னிலையசைச் சொல்.

English Translation

O Sridhara, You Say, “Giving credence to complaints of others, did you not blame me for stealing their butter, and bind me by my hands to a stone mortar for all to see?” If you stand there taunting me

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்