விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!*  உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி* 
  மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி*  மதுசூதனே என்று இருந்தேன்*
  புண் ஏதும் இல்லை உன்காது மறியும்*  பொறுத்து இறைப் போது இரு நம்பீ! 
  கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா*  காவலனே! முலை உணாயே   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நான - (தாயாகிய) நான்;
விரும்பி - ஆதரங்கொண்டு;
உன் வாயில் - உன் வாயிலே;
அதனை  - (நீ மண் உண்ட) அதை;
நோக்கி - பார்க்கும்போது;

விளக்க உரை

காதில் கடிப்பிட வேணுமென்று யசோதை அழைத்துக் கொண்டிருக்கவும் கண்ணன் வராதிருந்ததுமல்லாமல் மண்ணையும் தின்றானாக அதற்காக அவள் கோபங்கொண்டு அவனையடிக்க அப்போது அவன் தனது வாயைத் திறந்துகொண்டு ஆகாயமுழுதும் தொனிபரவும்படி அழ அது கண்டு யசோதை ‘இவன் எவ்வளவு மண் தின்றிருப்பன்’ என்பதை வாயிலுள்ள மண்சுவட்டைக் கொண்டு தெரிந்துகொள்வோமென்று அவன் வாயை விரும்பிப் பார்க்கையில் அவன் வாயினுள்ளே உலகங்களை யெல்லாம் முன்போலக் கண்டு ‘இவனை நமது மகனென்றெண்ணி அடித்தோமே! இவன் ஸர்வேச்வரனன்றோ’ என்று அஞ்சியிருக்க கண்ணன் தன்னை யசோதை இப்படி வேறாக எண்ணினதைப் பொறாமல் அதனை அவள் மறந்து தன் பிள்ளையென்றே கொண்டு தழுவும்படி ஸமீபித்து நிற்க அப்போது அவள் காதில் கடிப்பையிடும்படி முயல, கண்ணன் அது கண்டு அம்மா! என் காது குத்தியதனால் புண்ணாயிருக்கிறது நோகும்; ஆதலால் அது எனக்கு வேண்டா என்று மறுக்க யசோதை ‘உன் காதில் புண் ஒன்றுமில்லை ஆறிவிட்டது; இந்தக் குண்டலத்தை இடும்போது உன் காது சற்று மறியும்; அதை மாத்திரம் பொறுத்துக்கொள்ள வேணும்’ என்று சொல்ல கண்ணன் அதற்கு இசைந்து நிற்க யசோதை அவனைப் பலபடியாகக் கொண்டாடக் கடிப்பிடும்போது உண்டாகும் நோவைப் பொறுப்பதற்காக முலையுண்ண வேணுமென்று விரும்புகின்றாள். நோக்கி - நோக்க : எச்சத்திரிபு. அஞ்சி - ‘இவனை நம்மகனென்றெண்ணி யடித்தோமே; இவன்றானிப்போது நாராயணனாயிராநின்றானே’ என்று அஞ்சினளென்க. ???? நன்-‘மது’ என்ற அஸுரனைக் கொன்றவன். “என்றிருந்தேன்” என்பது மொருபாடம். ஆகாசம் சப்தகுணகமாதலால் “விண்ணெல்லாம் கேட்க” என்றது.

English Translation

O Madhusudana! When I pried open your mouth out of concern for you, your bawl was heard all over the skies; fear struck my heart when I saw all the worlds in it. I realized you are the Lord. See, th

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்