விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்*  சுரிகுழலாரொடு நீ போய்க்* 
  கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்*  குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*
  பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்*  பிரானே! திரியிட ஒட்டில்* 
  வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்*  விட்டுவே! நீ இங்கே வாராய்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிரான் - தலைவனே;
சோத்தம் - உனக்கு ஓரஞ்ஜலி;
என்று - என்று சொல்லி;
இரந்தாலும் - (வரவேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக்கொண்டாலும்;
கொள்ளாய் - (நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ - பூர்ணனே;

விளக்க உரை

கண்ணபிரான் ‘நேற்று நீ என்னை அழைக்கையில் நான் வர, அப்போது வந்ததைக் குணமாகக் கொள்ளாமல் என்னை அடித்தவளன்றோ நீ’ என்ன; யசோதை நீ பெண்களுடன் தனியிடத்திலே குரவையாடி வந்தால் அதை நான் எப்படி குணமாகக் கொள்ளக்கூடு மென்கிறாளென்க. பேர்த்தும் – புநி! புநி!; இது சிறிது இது சிறிது என்றுசொல்லி யசோதை கொடுக்கும் அப்பங்களைக் கண்ணன் தள்ளிவிடவும் பின்னும் அவன் விரும்பும்படி பெரிய பெரிய அப்பங்களைக் கொடுப்பேனென்று கருத்து. குரவைக் கூத்தாவது - ???? இத்யாதிப்படியே - ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாகத் தோன்றி நின்று கைகோத்தாடல்; இதைத் தான் ராஸக்ரீடை என்பது என்பர் - ஸம்ப்ரதாயிக ஆர்யவ்ருத்தர்.

English Translation

O Vishnu! My Master! Even when I beg of you saying, “Please”, you do not come. My Lord, if you come here after going out with curly-haired girls to dance the Rasa, would I take it as a virtue? I will

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்