விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* 
    காதல் என் மகன் புகல் இடம் காணேன்*  கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
    கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*  குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
    ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓது - ஓதியுணர்தற்கு உரிய
வாய்மையும் - ஸத்யவசநமான வேதத்தையும்
உவனியம் பிறப்பும் - (அதனை ஓதுதற்கு அதிகார முண்டாம்படி) உபநயனஞ் செய்தலால் வரும் (இரண்டாவது) பிறப்பையும்
முன் - முன்பு
உனக்கு தந்த - உனக்கு அளித்தவனும்

விளக்க உரை

ஸாந்தீபினிக்கு எம்பெருமான் திருவருள்செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம்புகுகிறாரிதில். ஸாந்தீபினியின் வேண்டுகோளைப் பூர்த்திசெய்ததுபோல அடியேன் வேண்டுகோளையும் நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகின்றாராயிற்று. இடைப்பிள்ளையான கண்ணபிரான் ஸாந்தீபினியிடத்தில் வேதமோதின னென்பதும் உபநயநஸம்ஸ்சாரம் பெற்றனனென்பதும் எங்ஙனே சேருமென்று சிலர் சங்கிப்பர்; ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனா யொளித்து வளர்ந்தவனான கண்ணன் க்ஷத்ரிய ஜாதியிற் பிறந்தவன். பிராமணர் க்ஷத்ரியர் வைசியர் என்னும் மூன்று ஜாதியாரும் தேஹோத்பத்தியாகிய இயற்கைப் பிறப்புடனே செயற்கைப் பிறப்பாக உபநயனமென்கிற ஸம்ஸ்காரத்தாலாகும் ஜ்ஞாநஜந்மத்தையுங்கொண்டு இருபிறப்பாளராய் ‘த்விஜர்’ எனப்படுவரென்க. உவனியம் - உபநயனமென்ற வடசொல்லின் சிதைவு. பூணூல் தரிக்குஞ்சடங்கு. மாணாக்கனை ஆசாரியள் தன்னிடத்தே வைத்துக்கொள்ளுதல் என்று பதப்பொருள்.

English Translation

Then in yore the most learned Rishi begot Markandeya whom yama had a claim on, Fearing whom the child prayed to your lotus feet, when you gave him Abhayam and then rescued him. Then you gave him the shade of your lotus-feet abidingly sought by the seeker. Ocean-hued Lord. I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்