விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*  மதியாத வெம் கூற்றம்- 
  தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்*  தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
  பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்*  எண்ணிய பேர் அருள்*  எனக்கும்- 
  அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சரண் ஆய் - (அவனுக்கு நீ) ரக்ஷகனாகி
தகவு இல் காலனை உக முனிந்து - இரக்கமில்லாத யமனை வலியொழியும்படி கோபித்து
ஒழியா - அவ்வளவோடு விட்டிடாமல்
பின்னை - அதற்குமேலே
என்றும் நின்திரு அடி பிரியா வண்ணம் எண்ணிய - எந்நாளும் (அம்முனிகுமாரனை) உன்திருவடிகளை விட்டுப் பிரியாமலிருக்கும்படி திருவுள்ளம் பற்றி

விளக்க உரை

மார்க்கண்டேயனுக்கு எம்பெருமான் திருவருள் புரிந்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம்புகுகிறாரிதில். மார்க்கண்டேயனுக்கு யமபயத்தை யொழித்து எப்பொழுதும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றைத் தந்தருளியதுபோல, அடியேனுக்கும் பிறவித் துன்பங்கட்குப் பயப்படுதலை யொழித்து எந்நாளும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றைத் தந்தருளவேணுமென்று பிரார்த்திக்கிறார்.

English Translation

O, The Lord to whom all offer worship, you did grace to one Govinda Swami, "Peacock-like the sweet dames offer pleasure, you have no knowledge of this life-aspect. Go now to the world, once again live there, then return to me offer you re satisfied". Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord Surrounded by groves in Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்