விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*  மலர் அடி கண்ட மா மறையாளன்* 
    தோகை மா மயில் அன்னவர் இன்பம்*  துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*
    போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*  போதுவாய் என்ற பொன் அருள்*  எனக்கும 
    ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா நிலம் - விசாலமான இப்பூமண்டலத்திலுள்ளாரும்
முழுதும் - மற்றுமுள்ள சராசரங்களடங்கலும்
வந்து இறைஞ்சும் - வந்து வணங்கப்பெற்ற
மலர் அடி - (உனது) திருவடித் தாமரைகளை
கண்ட - ஸாக்ஷாத்கரித்த

விளக்க உரை

கோவிந்தஸ்வாமியினுடைய கருத்தறிந்து காரியஞ்செய்ததுபோல அடியேனுக்கும் கருத்தறிந்து காரியஞ்செய்யவேணுமென்று அவனுடைய விருத்தாந்தத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம்புகுகிறார். கோவிந்தஸ்வாமி யென்பானொரு பிராமணன் இதிஹாஸ புராணங்களைப் பலகாலுங்கேட்டு அதனாலே கண்ணபிரானுடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராஸக்ரிடை (குரவைகோத்தல்) முதலிய திருவிளையாடல்களையும் ஸாக்ஷாத்தாகக் கண்டு களிக்கக் கருத்துக்கொண்டவனாய், ‘இதை எம்பெருமான் பக்கல் நாம் பிரார்த்தித்தால் அப்பெருமான் அருள்செய்யக் குறையில்லை’ என்றெண்ணி ஊன்வாட வுண்ணாது உயிர்காவலிட்டு உடலிற் பிரியாப்புலனைந்தும் நொந்து தான்வாடவாடத் தவஞ்செய்கையில், எம்பெருமான் இவனது நினைவின்படியே க்ருஷ்ணாவதார க்ருத்யங்களையெல்லாம் அவ்வண்ணமே ஸாக்ஷாத்கரிப்பித்து ‘இன்னமும் உனக்கு வேண்டுவதென்?’ என்று கேட்டருளினன்; அதற்கு இவன் ‘தேவரீரோடு கூடவே அத்தாணிச் சேவகனாயிருந்து நித்யாநுபவம் பண்ணிக்களிக்க விரும்பியிருக்கின்றேன்’ என்றான்;

English Translation

Then the posionous serpent called Sumuka, fearing wrath of the merciless Garuda, came to you with a prayer for safety, when you gave him to Garuda for safe keep. O the foul-mouthed agents of Yama-god mercilessly will take me, I fear them. Ocean-hued Lord, I've come to your lotus feet. O Lord surrounded by groves in Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்