விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
  ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*
  ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
  ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எழில் திகழ் - அழகு பொலிந்தவையும்
திரள் தோள் ஆயிரம்   திரண்டவையுமான - (கார்த்த வீர்யார்ஜுநனுடைய) தோள்களாயிரமும்
துணிய - அறும்படியாக
அடல் மழு பற்றி - தீக்ஷ்ணமான மழுப்படையைக் கையிற்கொண்டு
மற்றவன் - அந்தக்கார்த்த வீரியார்ஜுநனை

விளக்க உரை

அகல் விசும்பு அணைய = பெருமான் கையினால் போரில் உயிர்துறந்தவன் வீரஸ்வர்க்கம் சேரக்கடவனென்க. தேவர்களையும் உட்பட நலிந்துகொண்டு கொழுந்துக்கிடந்த இவன் மாண்டுபோகவே; பின்பு தேவர்கள் மனமகிழ்ந்து திருப்பாற்கடலிற் சென்று பெருமானைத் துதிக்கக் கேட்க வேணுமோ? அது சொல்லுகிறது பின்னடிகளில். திருவாய்மொழியில் “ஐந்துபைந்தலையாட ரவணைமேவிப் பாற்கடல் யோகநித்திரை, சிந்தைசெய்த வெந்தாய்” என்கிறார் நம்மாழ்வார்; இவர் “ஆயிரஞ்சுடர் வாயரவணைத் துயின்றான்” என்கிறார்; இவ்வெண்ணில் ஒரு நிர்ப்பந்தமில்லை; திருவனந்தாழ்வானுக்கு மகிழ்ச்சியின் மிகுதியினால் வாய்கள் பல்லாயிரமாகவும் பணைக்குமென்ப.

English Translation

The warrior king karttavirya Arjuna, with arms like a thousand peaks, fell to the sharp axe of the Lord Parasurama; his thousand arms were cut, and he went skyward. The Lord then, praised by the celestials with the chant of a thousand names, went to his abode in Milk Ocean, to recline on his thosuand-hooded snake. He is the resident of Arangama-Nagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்