விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால் 
    ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு
    கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு* 
    ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேரானை - திருப்பேர் நகரில் உறைபவனும்
குறுங்குடி எம் பெருமானை - திருக்குறுங்குடியி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமி யானவனும்
திருத்தண்காலூரானை - திருத்தண்காலில் நித்யவாஸம் பண்ணுமவனும்
கரம்பனூர் உத்தமனை - திருக்கரம்பனூரில் உத்தமனாய் விளங்குபவனும்,
முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும் - (உள்ளே) முத்துக்கள் ஒளிவிடாநிற்பனவும் கருநிறம் மிக்கவையும் திடமுள்ளனவுமான ஸப்த ஸமுத்ரங்களையும்

விளக்க உரை

“கரம்பனூருத்தமனை” என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் காண்மின்:- “வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்து கிடக்கிறவனை.” இதற்கு அரும்பதவுரை இட்ட ஒருவர் – “எல்லாரும் நடக்கும் வழியாகையாலே ஸேவிப்பர்ர் மிகுகையால் கதவிட அவஸாமில்லை யென்று கருத்து” என்றெழுதி வைத்தார்; அது பொருளன்று; அவ்விடத்துக் கோபுர வாசலுக்குக் கதவு இல்லாதிருந்தமை சொன்னபடி. அதனை ஸௌலப்ய பரம காஷ்டைக்கு அநுகுணமாகத் திருவுள்ளம்பற்றி சாடுக்தியாகப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்தபடி. இப்படிப்பட்ட ஸௌலப்யத்தைக் கணிசித்தே உத்தமன் என்று திருநாமமிடப் பெற்றான்போலும் என்பதும் தொனிக்கும். ஆராதென்றிருந்தானை – ஜகத்ரக்ஷணம் எவ்வளவு பண்ணினாலும் ஒன்றும் செய்திலனாக நினைத்திருக்குமிருப்பைச் சொன்னபடி.

English Translation

The Lord of Tirupper, the Lord of Tirukkurungudi, the resident of Tiruttankal, the perfect one of karambanur, the lord who ate the seven oceans, the seven mountains, the seven continents and all else, -I have seen him in Southern Arangam amid cool waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்