விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார் ஆளும் இளங் கொங்கை*  வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*  எண்ணில் 
    பேராளன் பேர் அல்லால் பேசாள்*  இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*
    தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்*  ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த- 
    தேராளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் செப்புகேனே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இ பெண் பெற்றேன் நான் - இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றேன் நான்
என் செய்கேன் - என்ன பண்ணுவேன்?;
தார் ஆளன் - திருமாலை சாத்திக்கொண்டிருப்பவனும்
தண் குடந்தை நகர் ஆளன் - குளிர்ந்த திருக்குடந்தை நகரை ஆள்பவனும்
ஐவர்க்கு ஆய் - பஞ்சபாண்டவர்களுக்காக

விளக்க உரை

இப்பெண் பெற்றேன் என்செய்கேன் நான் = இதற்கு இரண்டுவகைப் பொருள்: இப்படி என் வார்த்தை கேளாத அடங்காப்பெண்ணைப் பெற்றேனே! இவளை இழந்தேனே! ஆநியாயமாய்க் கெட்டேனே! என்னசெய்வேன் - என்று வருந்திச் சொல்வதாகப் பிறர் நினைக்கவேணும்; தனக்குள்ளே பெருமகிழ்ச்சி; என்னைப்போலே பெண் பெற்றாருண்டோ? இத்தனை சிறு பிராயத்திலே பகவத் விஷயத்தில் ஆழங்காற்படும்படியான பாக்கியம் வாய்ந்த பெண்ணைப் பெற்ற நான் என்ன நோன்பு நோற்றேனோ? என்னும் மகிழ்ச்சியும் தொனிக்கும். (தாராளனித்யாதி.) ‘எல்லாரையும் ரக்ஷரிப்பவன் நான்’ என்று தனிமாலையிட்டிருப்பவன் என் மகளை இப்படி அழிக்கின்றானே; திருக்குடந்தையிலே சாய்ந்தருளி லோகரக்ஷணம் பண்ணுகிறவன் இவளை இப்படி அழிக்கிறானே; ‘பார்த்தஸாரதி’ என்று பேர்பெற்று அன்பர்க்குக் காரியஞ்செய்தவன் இவளுக்குக் காரியஞ் செய்யாதொழிகிறானே யென்கை.

English Translation

She doen's notice that her corset breasts have lost their red colour, If she speaks, it's only names of the Lord, such is my daughter's plight. Tulasi wreath Kudandai-Lord who drove the chariot for the five kings, -O Ladies, how can I accept what he did to my daughter frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்