விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேயன் என்றும் மிகப் பெரியன்*  நுண் நேர்மையன் ஆய*  இம்
    மாயை ஆரும் அறியா*  வகையான் இடம் என்பரால்*
    வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து*  ஆர் புனல் காவிர* 
    ஆய பொன் மா மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து - மூங்கில்களில் நின்று முதிர்ந்த முத்துக்களையும் ரத்னங்களையும் தள்ளிகொண்டுவந்து
ஆர் புனல் காவிரி - நிறைந்திருக்கிற தீர்த்தத்தையுடைய திருக்காவேரியாலும்
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து - தகுதியான அழகிய பெரிய திருமதிற்களாலும் சூழப்பட்டு
அழகு ஆர் - அழகு பொருந்தியிருப்பதான

விளக்க உரை

சேயனென்று ஆய இம்மாயை ஆருமறியாவகையான், - மிகப் பெரியனென்னு ஆய இம்மாயை ஆருமறியாவகையான். – நுண்ணேர்மையன் என்று ஆய இம்மாயை ஆருமறியாவகையான் - என்று இங்ஙனே கூட்டி மூன்றுவாக்கியமாக அநுஸந்தித்தால் பொருள் நன்கு விறங்கும். சேயன் என்றால் தூரத்திலிருப்பவன் என்று பொருள்; பரமபதத்தில் வீற்றிருக்கு மிருப்பைச் சொல்லுகிறது. இவ்விருப்பின் ஆச்சரியத்தை யாரும் அறிய முடியாமை சொன்னபடி. மிகப்பெரியன் என்றது – “தோள்களாயிரத்தாய் முடிகாளயிரத்தாய் துணைமலர்க்கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய்” என்று சொல்லப்பட்ட விராட் ஸ்வரூபநிலைமையைச் சொன்னபடி இவவாச்சரியமம் ஒருவராலும் அறியமுடியாதபடி உள்ளவன் என்கை.

English Translation

Oh, they say the Southern Arangam, -surrounded by the swilling waters of Kaveri that wash PEARLS and gems against the golden walls of the temple, -is the abode of the Lord afar, the Lord over all, residing in every pore, a wonder which no one will ever understand.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்