விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏனம் மீன் ஆமையோடு*  அரியும் சிறு குறளும் ஆய* 
    தானும்ஆய*  தரணித் தலைவன் இடம் என்பரால்*
    வானும் மண்ணும் நிறையப்*  புகுந்து ஈண்டி வணங்கும்*  நல் 
    தேனும் பாலும் கலந்தன்னவர்*  சேர் தென் அரங்கமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய் - வராஹமாகவும் மத்ஸ்ய கூர்மமாகவும் நரஸிம்ஹமாகவும் வாமநனாகவும் திருவவதரித்தவனாய்
தானும் ஆய - ஸ்ரீராமபிரானாகவும் திருவவதரித்தவனான
தரணி தலைவன் - ஸர்வலோகேச்வரனுடைய

விளக்க உரை

இரண்டாமடியில், “தானுமாய” என்றது ஸ்ரீராமாவதாரத்தை யுட்கொண்டதேயாம். மேலே எட்டாம்பத்தில் தசாவதாரங்களையும் சேர்த்துச் சொல்லுகிற பாசுரத்தில் “மீனோடா மை கேழலாரி குறளாய் முன்னுமிராமனாய்த் தானாய்ப், பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கறிகியுமானான்றன்னை” என்றதில் ஸ்ரீராமனைச் சொல்லவேண்டு மிடத்துத் ‘தானாய்’ என்றதும் குறிக்கொள்ளத்தக்கது. தேனும் பாலுங் கலந்தன்னவர் = தேனம் தேனும் கலந்தார்போலும் பாலும் பாலும் கலந்தாற்போலும் வேற்றுமையின்றியே ஏகரஸமாகக் கலந்திருக்கின்ற பரமரஸிகர்கள் என்றவாறு. ‘கலந்தாலன்னவர்’ என்பது ‘கலந்தன்னவர்’ எனத்தொக்கது. இவ்விடத்து வியாக்கியானத்திலே பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின் :- “நித்யஸூரிகள் ஸம்ஸாரிகள் என்கிற வாசி தெரியாதே ஒரு நீராய்ப் பரிமாற நிற்பர்கள். தேசாந்தரங்களில் முன்பு கண்டறியாதார் வந்து போகப்புக்கால் ‘பிரிந்துபோகா நின்றோமே!’ என்று கண்ணுங் கண்ணீருமாயிறே யிருப்பது.” என்று.

English Translation

Oh, they say the Southern Arangam, -filled with milk-and-honey-sweet devotees from all over the Earth and Sky who throng to offer worship, -is the abode of the Lord of the Earth who came as a boar, a fish, a man-hon, a manikin and as himself.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்