விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்டு இவ் வையம் அளப்பான் சென்று*  மாவலி கையில் நீர 
  கொண்ட*  ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்* 
  வண்டு பாடும் மது வார் புனல்*  வந்து இழி காவிரி* 
  அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பண்டு - முன்பொருகால்
இ வையம் அளப்பான் சென்று - - இப்பூமியை அளந்து வசப்படுத்திக் கொள்வதற்காகப் போய்
மாவலி கையில் - மஹாபலியினுடை கையில் நின்றும் தாந ஜலத்தை
ஆழி தடம் கை கொண்ட - திருவாழியை யேந்தவல்ல தடக்கையாலே ஏற்றுக்கொண்ட
குறளன் - வாமநமூர்த்தியினது

விளக்க உரை

திருக்காவிரித் தீர்த்தம் மதுவோடுகூடிப் பெருகும்; மதுவில் நசையாலே வண்டுகள் வந்து மொய்க்கும்: 1. “ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து, ஊக்கமேமிகுந்து உள் தெளிவின்றியே, தேக்கெறிந்து வருதலிற்றீம்புனல், வாக்கு தேனுகர் மாக்களை மானுமே” என்றது காண்க

English Translation

Oh, they say the Southern Arangam, -Surrounded by waters that flow through beautiful groves wafting their fragrance everywhere, buzzing with bees that drink nectar and sing, -in the abode of the discus-wielding Lord who came as a manikin to Mabali's sacrifice and took the Earth as a gift from him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்