விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி*  மாதவா! உண் என்ற மாற்றம்* 
    நீர் அணிந்த குவளை வாசம்*  நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*
    பார் அணிந்த தொல் புகழான்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    சீர் அணிந்த செங்கண்மால் மேல்*  சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வார் அணிந்த - கச்சை அணிந்து கொண்டிருக்கிற;
கொங்கை - ஸ்தநங்களையுடைய;
ஆய்ச்சி - யசோதை;
மாதவா - மாதவனே;
உண் - முலையை (உண்பாயாக);

விளக்க உரை

வாரணிந்த கொங்கையாய்ச்சி - ராஜாக்களுக்கு போக்யமான பொருளை வேலைக்காரர் ­மூடிக்கொண்டு போவதுபோல கண்ணனுக்கு விருப்பமான ஸ்தநங்களை யசோதை பிறர் கண்படாதபடி கச்சினால் மறைத்து வைப்பாளென்க. மாற்றம் (ஆகிய) பாடல் எனத்தொடரும். குவளை - ‘குவலம்’ என்ற வடசொல் விகாரம்; ‘குவலயம்’ என்பது மதுவே; “குவாலயம் குவலயம் குவாலம் குவலம் குவம்” என்பது - வடமொழி நிகண்டு. வாசம் - ‘வாஸநா’ என்ற வடசொற் சிதைவு. ‘நிகழ்நறும்’ என்ற பாடம் பொருந்தாது. அடிவரவு - அரவணை வைத்த தந்தம் கஞ்சன் தீய மின் பெண்டிர் இருமலை அங்கமலம் ஓட வாரணி போய்.

English Translation

These songs of the world famous Pattarbiran of Srivilliputtur with the fragrance of water-lotus wafting everywhere recalls the corset-breasted Yasoda’s suckle call to Madhava. Those who master I will

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்