விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓட ஓடக் கிண்கிணிகள்*  ஒலிக்கும் ஓசைப் பாணியாலே* 
    பாடிப் பாடி வருகின்றாயைப்*  பற்பநாபன் என்று இருந்தேன்*
    ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு*  அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி* 
    ஓடி ஒடிப் போய்விடாதே*  உத்தமா! நீ முலை உணாயே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓடஓட - (குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால்;
ஒலிக்கும் - சப்திக்கின்ற;
கிண்கிணிகள் - பாதச் சதங்கைகளினுடைய;
ஓசைப்பாணியாலே - ஓசையாகிற சப்தத்தால்;
பாடிபாடி - இடைவிடாது பாடிக்கொண்டு;

விளக்க உரை

கண்ணபிரான் நிடந்து வரும்போது திருவடிச் சதங்கைகளின் ஓசைதானே பாட்டாயிருக்குமென்க. (பற்பநாபனென்றிருந்தேன்) “கொப்பூழிலெழு கமலப்பூவழகர்” என்றபடி வேறொரு ஆபரணமும் வேண்டாமல் திருநாபீகமலமே ஆபரணமாம்படி யிருப்பானொருவனன்றோ இவன்! இவனுக்கு வேறொரு பாட்டும் கூத்தும் வேணுமோ? சதங்கையோசையும் நடையழகுமே பாட்டும் ஆட்டமுமாய் அமைந்த ஆச்சரியம் என்னே! என்று வியப்புக் கொண்டிருந்தேன் என்க. இனி - இவன் அழிந்து கிடந்த வுலகத்தை நாபீகமலத்தில் உண்டாக்கின வனன்றோ ஆகையால் நம்முடைய ஸத்தையையுந் தருகைக்காக வருகிறானென்றிருந்தேன் என்றும் விசேஷார்த்தம் கூறுவர்.

English Translation

O Perfect One! You go running everywhere, and over the din of the ankle bells, you sing songs, and to match the songs you dance and dance vigorously. When I saw you come thus I said to myself, “This

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்