விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெருகு காதல் அடியேன்*  உள்ளம்- 
    உருகப் புகுந்த*  ஒருவர் ஊர் போல்* 
    அருகு கைதை மலர*  கெண்டை 
    குருகு என்று அஞ்சும்* கூடலூரே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெருகு காதல் - வளர்ந்துவரும் ஆசையையுடையேனான
அடியேன் - அடியேனுடைய
உள்ளம் - மனமானது
உருக - கரையும்படியாக
புகுந்த - உள்ளே பிரவேசித்திருக்கிற

விளக்க உரை

நாட் செல்ல நாட் செல்ல ஆற்றுப் பெருக்குப்போலே பெருகா நின்றுள்ள காதலைக் கொண்ட அடியேனுடைய ஹ்ருதயம் உருகும்ப்டியாக உட்புகுந்த பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர். அங்கே வாய்க்காற் கரைகளில் தாழம்பூக்கள் மலர்ந்திருக்கும்; அவற்றைக் கண்ட கெண்டை மீன்கள் குருகுகள் நம்மை இரை கொள்வதற்காக வந்து ஸ்தப்தமாய் நிற்கின்றன போலும்’ என்றெண்ணி அஞ்சி யொளிக்கின்றனவாம். கைதை – ‘கேதகீ’ என்னும் வடசொல்விகாரம். குருகு – கொக்கு.

English Translation

With love for him rising in my heart, the Lord has come to reside in kudalur, where screwpine bursts into blossoms, and kendai-fish live in fear taking them to be storks.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்