விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருந் தண் கடலும்*  மலையும் உலகும்*
    அருந்தும் அடிகள்*  அமரும் ஊர்போல*
    பெருந் தண் முல்லைப்*  பிள்ளை ஓடிக்*
    குருந்தம் தழுவும்*  கூடலூரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரு தண் கடலும் - கறுத்துக் குளிர்ந்த கடல்களையும்
மலையும் - மலைகளையும்
உலகும் - (மற்றும்) லோகங்களையும்
அருந்தும் - (பிரளயத்தில்) அமுதுசெய்த
அடிகள் - ஸ்வாமி

விளக்க உரை

கடல்கள் மலைகள் முதலானவற்றோடு கூடிய லோகங்களை யெல்லாம் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸர்வேச்வரன் வாழுமிடம் திருக்கூடலூர். முல்லைக்கொடிகள் குருந்த மருத்தை முட்டாக்கிட்டுப் படர்ந்திருக்கின்றனவாம் அங்கு.

English Translation

The Lord who took the dark ocean, the mountains and all the worlds resides in Kudolur where the sapling of the cool fragrant Mullai creeper climbs all over the hefty Kurundu tree

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்