விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாம்*  தம் பெருமை அறியார்*  
  தூது வேந்தர்க்கு ஆய*  வேந்தர் ஊர்போல்*
  காந்தள் விரல்*  மென் கலை நல் மடவார்*
  கூந்தல் கமழும்*  கூடலூரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தம் பெருமை தாம் அறியார் - தமது பெருமேன்மையைத் தாமும் அறியாதவரும்
வேந்தர்க்கு தூது ஆய வேந்தர் - (பாண்டவ) மன்னர்கட்கு தூதனாய்ச் சென்றவருமான தேவாதி தேவருடைய
ஊர் - திவ்யதேசம் (எதுவென்றால்)
காந்தன் விரல் மென் கலை நல் மடவார் - செங்காந்தன் மலர்போன்ற விரல்களையுடையவரும் அழகிய ஆடையணிந்தவர்களுமான நல்ல பெண்டுகளினுடைய

விளக்க உரை

எம்பெருமான் தான் ஸர்வஜ்ஞனென்றும் ஸர்வசக்தனென்றும் வேத வேதாந்தங்களினால் ஓதப்பட்டாலும் அவன் தன் பெருமையைத் தானறியவல்லனல்லன்; ‘உனக்கு இவ்வளவு பெருமையுண்டு’ என்று பிறர் சொல்லக்கேட்பவனேயன்றி, தன்பெருமை தானறியானவன். அவனக்குப் பெருமையாவது பரத்வம்பொலிய நிற்குமதன்று; ஏவிக் காரியங் கொள்ளலாம்படி தன்னைத் தாழவிட்டுக் கொண்டிருக்கு மிருப்பு இங்குப் பெருமை யெனப்படுகிறது. இப்பெருமையை மூதலிக்கிறார் “தூது வேந்தர்க்காய வேந்தர்” என்பதனால். பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலைகட்டித் தூது சென்ற பாண்டவதூதனென்று பேர்பெற்றான்; இப்படி இவன் இழிதொழில் செய்தாலும் ‘பராத்பரனா யிருப்பவன் இப்படி இழிதொழில் செய்யப்பெறுவதே!’ என்று அறிவித்திறந்தோர் ஈடுபடும்படி யிருக்குமத்தனையன்றி இழிவகக்கருத இடமில்லையே; ராஜாதிராஜன் என்கிற பெருமையும் மிக்குத்தோன்றுமென்கிறார் – “வேந்தர்க்குத் தூ தாய வேந்தர்” என்பதனால். இப்படி பரத்வஸௌலப்யங்கள் விகல்பிக்கலாம்படியுள்ள எம்பெருமான் திருக்கூடலூரிலுள்ளான். அவ்வூர் எத்தகையதென்னில்; செங்காந்தள் மலர்போன்ற விரல்களையுடையரும் மெல்லிய அழகிய ஆடைகளை அணிந்தவர்களுமான நன்மடவார்களின் கூந்தல் மணம் கமழப்பெற்றதாம்.

English Translation

Unassuming of their excellence, -like the Lord who through himself a king, went as a messenger for the kings, -beautiful dames with fingers thin as glory-lily petals, and dressed in soft material, move around wafting the fragrance of their coiffure in the Lord's own kudalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்