விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரு மலை போல் எதிர்ந்த மல்லர்*  இருவர் அங்கம் எரிசெய்தாய்!*  உன் 
    திரு மலிந்து திகழு மார்வு*  தேக்க வந்து என் அல்குல் ஏறி* 
    ஒரு முலையை வாய்மடுத்து*  ஒரு முலையை நெருடிக்கொண்டு* 
    இரு முலையும் முறை முறையாய்*  ஏங்கி ஏங்கி இருந்து உணாயே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இருமலை போல் - இரண்டு மலைபோலே (வந்து);
எதிர்ந்த - எதிர்த்துநின்ற;
மல்லர் இருவர் - (சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய;
அங்கம் - உடம்பை;
எரி செய்தாய் - (பயத்தாலே) எரியும்படி செய்தவனே;

விளக்க உரை

திருமலிந்து திகழுமார்வு = திரு - பிராட்டி என்றுமாம். தேக்க - தேங்க என்பதன் விகாரம். ஒரு முலையை வாயில் வைத்துக்கொண்டு மற்றொரு முலையின் காம்பைக் கையால் நெருடிக்கொண்டு பால் மிகுதியினால் மூச்சுத் தணக்க மாறிமாறி முலையுண்ணுதல் - குழந்தைகளினியல்பு; “ஒரு கையாலொரு முலைமுகம் நெருடா - வாயிலே முலையிருக்க” என்ற பெருமாள் திருமொழியுங் காண்க. இது - தன்மை நவிற்சி (ஸ்வபாவோக்தி).

English Translation

You routed the two mountain-like wrestlers in combat! Climb on to my lap, put your lips on one breast and fiddle with the other, take suck from both the breasts between moans and sniffles alternately,

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்