விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்*  பார் இடந்து எயிற்றினில் கொண்டு* 
    தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற*  திருவெள்ளியங்குடியானை*
    வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
    கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்*  ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு அறை சோலை மங்கையர் தலைவன் - வண்டுகள் முரலும் சோலைகளை யுடைய திருமங்கை காட்டில் உள்ளவர்களுக்கு ஸ்வாமியும்
மானம் வேல் - பெருமை தங்கிய வேற்படையையுடையவருமான
கலியன் - ஆழ்வாருடைய
வாய் ஒலிகள் இவை - ஸ்ரீஸூக்தியாகிய இத்திருமொழியை
கொண்டு - காலில் கொண்டு

விளக்க உரை

ஹேயமான ஐச்வர்யம் அருளிச்செயல் கற்கைக்குப் பயனாகச்சொல்லத்தகுமோ வென்னில்; இவ்வாழ்வார் படைத்த பெருஞ் செல்வமெல்லாம் பகவத்பாகவத கைங்கரியங்களிலே உதவப்பெற்று உத்தேச்யகோடியில் புகக் கண்டதனால் எல்லார்க்கு மிங்ஙனேயாகக் கடவதென்று திருவுள்ளம்பற்றி யருளிச்செய்கிறாரென்னலாம். ஐச்வர்யார்த்திகளும் தம் ஸ்ரீஸூக்தியை இழக்கலாகாதென்று அவர்களையும் ஆகர்ஷிப்பதற்கு அருளிச் செய்தாராகவுமாம். இவ்வருளிச்செயல் ஐஹிக புருஷார்த்தத்தோடு ஆமுஷ்மிக புருஷார்த்தத்தோடு வாசியற எல்லாவற்றுக்கும் ஸாதநம் என்பது விளங்கும்

English Translation

Bee-humming-groves-Mangai-king, spear wielder Kallyan has sung this beautiful decad of Tamil songs, on the Lord who in the yore came as a boar and lifted the Earth on his tusk teeth, and lay reclining the Milk Ocean lashed by waves, and who resides in Tiruvellyangudi, Those who master it will rule the Ocean-girdled Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்