விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்*  குணங்களே பிதற்றி நின்று ஏத்த* 
    அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற*  ஆழியான் அமர்ந்து உறை கோயில்*
    கடிஉடைக் கமலம் அடியிடை மலர*  கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய* 
    வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்*  வயல் வெள்ளியங்குடி அதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் - பிரமன் முதலிய தேவர்கள்
குடி குடி ஆக கூடி நின்று - குடும்பம் குடும்பமாகச் சேர்ந்திருந்து
குணங்களே பிதற்றி நின்று ஏத்த - (தனது) திருக்கல்யாண குணங்களையே சொல்லிக் கொண்டு துதிக்கப்பெற்ற
அடியவர்க்கு அருளி - அடியார் திறத்தில் கிருபை பண்ணிக்கொண்டு
அரவு அணை துயின்ற - சேஷசயனத்தில் திருக்கண் வளர்ந்தருள்கின்ற

விளக்க உரை

(கடியுடைக்கமலம் இத்யாதி.) நறுமணம் மிக்க தாமரை மலரானது கரும்புக்கும் செந்நெலுக்கு மடியிலே மலர்கின்றது; கரும்பும் பெருஞ்செந்நெலும் அத்தாமரை மலரின் இரு புறத்திலும் அசைகின்றன; அம்மலாரின் மீது அன்னம் பெடையோடு கூடிவாழ்கின்றது -என்று வருணிக்கிற விதற்கு ஒரு உட்கருத்து உரைக்கலாம்; அதாவது – தாமரைமலரென்பது ஒரு சிங்காசனம்; இருபக்கத்திலும் கரும்பும் செந்நெலும் அசைவது சாமரம் வீசுவதொக்ககும்; தாமரை மலரின்மீது அன்னம் பேடையோடுகூடி வாழ்வது பெருமானும் பிராட்டியும்கூடி வாழ்வதொக்கும் என்பதாம். மஹிஷியோடே கூட ராஜபுத்ரனிருக்கும் படிக்கு ஸ்மாரகமென்னவுமாம்.

English Translation

Gods in hordes come and offer worship with praise where the Lord graces his devotees, RECLINING on a serpent with a discus in hand. His temple is amid fields, -where lotus grows between sugarcane and paddy, swaying in the wind and swan-pairs nestle in the water tanks, -of Tiruvelliyangudi, that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்