விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்*  பெறுதும் என்னும் ஆசையாலே* 
    கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்*  கண்ணிணையால் கலக்க நோக்கி*
    வண்டு உலாம் பூங்குழலினார்*  உன் வாயமுதம் உண்ண வேண்டிக்* 
    கொண்டு போவான் வந்து நின்றார்*  கோவிந்தா நீ முலை உணாயே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்டவர்கள் - (உன்னைப்) பார்த்தவர்களான;
பெண்டிர் வாழ்வார் - (தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்;
நன் ஒப்பாரை - உன்னைப்போன்ற குழந்தைகளை;
பெறுதும் - பெறுவோம் (பெறவேணும்);
என்னும் - என்கிற;

விளக்க உரை

முதலிரண்டடியால் - பதிவிரதைகளான பெண்களின் மநோரதமும் பின் ஒன்றரையடியால் - யுவதிகளாய் போகமநுபவிக்க விரும்பின பெண்களுடய மநோரதமும் சொல்லுகிறதென்க. அவற்றில் வேண்டினபடி ஆகிறது. இப்போது நீ முலையுண்ண வரவேணுமென்கிறாள். பெண்டிர் = இர் - பலர்பல் விகுதி. பெறுதும் - தன்மைப்பன்மை வினைமுற்று. ஆஸா - வடசொல். கலக்க நோக்குதல் - ஒவ்வொரு அங்கத்தினுடையவும் ஸௌந்தர்யத்தை நோக்குதல்.

English Translation

Passing housewives stop when they see you, filled with a desire to beget a child like you. Bee-humming flower-coiffured girls roll their eyes over you and come to take you, to drink the nectar from y

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்