விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏர் ஆர் பொழில் சூழ்*  இந்தளூரில் எந்தை பெருமானைக்* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய்த*
    சீர் ஆர் இன் சொல் மாலை*  கற்றுத் திரிவார் உலகத்தில்* 
    ஆர் ஆர் அவரே*  அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகத்து ஆர் ஆர் - இவ்வுலகத்தில் எவரெவருண்டோ,
அவரே - அவர்களே
என்றும் - எக்காலத்திலும்
அமரர்க்கு - நித்யஸூரிகளுக்கும்
அமரர் ஆவார் - கௌரவிக்கத்தக்கவராவர்

விளக்க உரை

“இராமானுசனை… மேவும் நல்லோர் எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர், அக்குற்றமப்பிறப்பு அவ்வியல்வே நம்மையாட்கொள்ளுமே” என்று எம்பெருமானுரை அடிபணிந்தவர்கள் எக்குற்றவாளராயிருப்பினும் எவ்விழிபிறப்பாளராயினும் எவ்வியல்வினராயிருப்பினும் எம்பெருமானாசை ஆச்ரயிக்கப்பெற்ற பெருமையினால் மிகச் சீரியவரேயாவர் என்றாற்போலே, இத்திருமொழியை ஓதுமவர்களும் எத்தன்மையரா யிருப்பினும் இந்த ஸ்ரீஸூக்தியை அதிகரிக்கப்பெற்ற பெருமையினால் சிறந்தவரேயாவர் என்க. “உலகத்துஆரார்; அவரே” என்றதனால் இப்பொருள் விளங்கும்.

English Translation

This garland of sweet Tamil songs, by Mangai king kaliyan is on the Lord of indolur surrounded by fertile groves. Those who master it will be sweet ambrosia to devotees, and rule the gods as their god.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்