விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேசுகின்றது இதுவே*  வையம் ஈர் அடியால் அளந்த*    
    மூசி வண்டு முரலும்*  கண்ணி முடியீர்*
    உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து*  இங்கு அயர்த்தோம்*
    அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்*  இந்தளூரீரே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வையம் ஈர் அடியால் அளந்து - உலகங்களை இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவராயும்
வண்டு மூசி முரலும் கண்ணி முடியீர் - வண்டுகளானவை மொய்த்துக்கொண்டு ரீங்காரம் செய்யப்பெற்ற மாலையை திருமுடியில் அணிந்து கொண்டவராயுமிருக்கிற
இந்தளூரீர் - திருவிந்தளூர் நாதரே!,
இங்கு - இவ்வுலகில்

விளக்க உரை

இந்தளூரெம்பிரானே ! உன்னை நான் ஸேவித்தாலும் ஸேவிக்கிறேன், இழந்தாலும் இழக்கிறேன்; இஃது ஒரு பெரிய விஷயமன்று; முக்கியமாக ஒன்று சொல்லுகிறேன் கேளாய்; நீ குணசாலியென்று பேர்படைப்பதற்குப் படாதபாடுகள் பட்டிருக்கிறாய்; மாவலியிடம் குறளுருவாய்ச்சென்று மூவடிமண் இரந்துபெற்று த்ரிவிக்ரமனாகி மூவுலகங்களையுமளந்து இத்தனைபாடுகள் பட்டுப் பெரியகுணம் ஸம்பாதித்தாய்; என்னொருவனை உபெக்ஷிப்பதனால் அக்குணத்தை இழக்கப்போகிறாய்; ஒருவரும் அபேக்ஷியாதிருக்கச்செய்தேயும் எல்லார் தலையிலும் திருவடியை வைத்தருளின நீ, பல்பன்னிரண்டுங் காட்டி யாசிக்கின்ற என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாவிடில் குணக்கேடுவிளையாதோ? இதனை ஆராய்ந்தருள் என்கிறார். உம்மைக் காணுமாசை யென்னுங் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் - ‘திருமங்கை மன்னன் திருவிந்தளூர்ப் பெருமானைக்காண ஆசைப்பட்டு அதுபெறாதே முடிந்தான்’ என்று நாற்சந்தியிலே வார்த்தை கிளம்பினால் இதனில் மிக்க அவத்யமுண்டோ? ‘அயலார் ஏசுகின்றதும் இதுவே, நான் பேசுகின்றதும் இதுவே, என்று முடிவையும் முதலையுங் கூட்டி யோஜித்துக்கொள்க. ‘ஒருவர் ஆசைப்பட்ட அழகையும் ஒருவர் அந்த ஆசைக்கு முகங்காட்டின அழகையும் என்ன சொல்லுவோம்!, ஸர்வரக்ஷகன் படி இப்படியன்றோ இருப்பது!’ என்று அயலார் ஏசுவார்கள்; அப்படிப்பட்ட ஏச்சுக்கு இடமாகும்படி நடந்துகொள்ளவேண்டாம் என்பதே அடியேன் சொல்லுவது.

English Translation

O Lord of indalur! You took the Earth in two strides and wore the crown of bee-humming Tulasi garland, I feel into the ocean of a desire to see you here, and despaired. Others too are complaining about the same thing. This is what I say.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்