- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பரக்கழித்தாள் - ‘பரக்கு அழிந்தாள்’ என்று பிரித்து, பரக்கு என்பதற்கு அடக்கமென்று பொருள் கூறி, ‘அடக்கங்கெட்டாள்’ என்றுரைப்பர் சிலர். அதுநிற்க : கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்து வாலிவதைப் படலத்தில் -(79) “அரக்கரோ ரழிவுசெய்து கழிவரேலதற்கு வேறோர், குரக்கினத்தரசைக் கொல்ல மனநெறி கூறிற்றுண்டோ? இரக்கமெங்குகுத்தாயென்பால் எப்பிழை கொண்டாயப்பா, பரக்கழி யிதுநீ பூண்டாற் புகழையார் பரிக்கற்பாலார்?” என்ற செய்யுளில் ‘பரக்கழி’ என்றும் பதத்தின் பிரயோகம் காண்கிறது; அவ்விடத்துரையில் “பரக்கழி – பெருநிந்தை; பெருந்தீங்குமாம்” என்றிருக்கக் காண்கிறோம். ஆகவே இங்கே பரக்கழிந்தாள் என்பதற்கு – ‘பெரும்பழி விளையப்பெற்றாள்’ எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும். பெரிய வாச்சான்பிள்ளையும் பலவிடங்களில் இங்ஙனமேவி யாக்கியான மருளிச்செய்யக் காண்கிறோம். நாச்சியார் திருமொழியில் (12-3) “கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற” என்றவிடத்தில், ‘பரக்கழிக்கை – பழிவிளைக்கை’ என்பது வியாக்கியானம்.
English Translation
"Leader of the monkey army! Wielding mighty bow and arrow, Marching O'er a bridge on ocean you destroyed the Rakshasa clan!" "O My faultless Lord in Nangai, -mansions rise and stop the Moon!" Losing all her grace and CHARM my daughter sings of Parttan-Palli, O!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்