விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்*  கோல் வளையார் தம்முகப்பே* 
    மல்லை முந்நீர் தட்டு இலங்கை*  கட்டு அழித்த மாயன் என்றும்*
    செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி*
    பல் வளையாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பல் வளையாள் என் மடந்தை - பல வளைகளை அணிந்திருந்த என் பெண்ணானவள்
கோல் வளையார் தம் முகப்பே - அழகிய வளைகளையுடைய பெண்களின் முன்னே
கொல்லை ஆனாள் - வரம்பு அழிந்தவளானாள்;
பரிசு அழிந்தாள் - பெண்மைக்கு உரிய மரியாதைகள் அழியப்பெற்றாள்
மல்லை முந்நீர் தட்டு - செல்வம் மிக்க கடலை அடைத்து

விளக்க உரை

நேற்றுவரையில் ஒருவரம்பிலே கிடந்தவிவள் இன்று வரம்பு கடந்தவளாயினள்; பெண்மைக்கு உரிய நாண் மடம் அச்சம் முதலிய குணங்களைக் கைவிட்டாள்; வேற்று மனிசரைக் கண்டால் நாணி வாய்மூடிக் கிடந்த விவள் பல பெண்டிர்களின் எதிரே தன் தலைமகனுடைய வீரச்செயல்களைச் சொல்லத் தொடங்கி, கடலிலே அணைகட்டினவன் என்றும் இலங்கை பாழ்படுத்த பெருமிடுக்கன் என்றும் சொல்லுகின்றாள். (ஒருபிராட்டிக்காகப் படாதனபட்டு அரும்பெருங் காரியங்கள் செய்தவன் என் விஷயத்திலே உபேகஷையாயிருக்கின்றான் என்பதாகச் சொல்லுகிறாளாகவுமாம்.) பல்வளையாள் – பல வளைகளை யிட்டு அலங்கரித்து வைத்தால் இவள் இப்படி பகவத் விஷயத்தி லீடுபட்டு உருகி உடம்பு மெலிந்து வளை கழலப்பெற்றாள் காண்மின் என்ற குறிப்பு.

English Translation

Expelled by her bangled friends and cheated of her lustre-wealth, "Stranger-Lord you made a wreck of ocean-girdled Lanka city!", "Lord Living with seers in Nangai, Deva-deva prosperously, "Like a parrot, my gold-bangled, daughter sings of parttan-Palli, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்