விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து* 
    மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*
    தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா* 
    ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாசுதேவா - கண்ணபிரானே;
தீய புந்தி - துஷ்டபுத்தியையுடைய;
கஞ்சன் - கம்ஸனானவன்;
உன் மேல் - உன் பக்கலிலே;
சினம் உடையவன் - கோபங்கொண்டவனாயிரா நின்றான்;

விளக்க உரை

தேவகியின் மக்களறுவரைக் கல்லிடை மோதி சிசுஹத்திசெய்த கொடிய கம்ஸன் ‘தேவகியின் எட்டாவது கர்ப்பம் உனக்குப் பகை’ என்ற ஆகாயவாணியினாலும் பின்பு துர்க்கை சொல்லிப் போனதனாலும் ‘நம் பகைவன் கை தப்பிப்போய் நமக்கு அணுகவொண்ணாத இடத்திலே வளரா நின்றான்; அவனை எப்படியாவது கண்டுபிடித்துக் கொன்றுவிடவேணும்’ என்று உன்மேல் மிகவும் கறுக்கொண்டு ஆஸுர ப்ரக்ருதிகளை ஸ்தாவர ஜங்கமங்களான வடிவுகளைக்கொண்டு நீ திரியுமிடங்களில் நிற்கும்படி ஏவியிருக்கிறான்! அவன் அவர்களைக்கொண்டு நீ துணையற்றுத் திரியும்போது பார்த்து உனக்குத் தெரியாமலே தப்பமுடியாதபடி வஞ்சனையால் உன்னைப் பிடித்துக் கொண்டால் பின்னை என்னால் உயிர் தரித்திருக்க முடியாது; என் பேச்சைப் பேணி இங்கேயே இருக்கக் கடவாய் என்று வற்புறுத்துகின்றாள். (அணிவிளக்கே) உனக்கு ஏதேனும் தீங்குவந்தால் இத்திருவாய்ப்பாடியடங்கலும் இருள் மூடிவிடுங்காணென்கிறாள். சோர்வு - தளர்ச்சி; இலக்கணையால் தனிப்பட்டிருத்தலைக் காட்டும். கருமம் - ?? அமர்ந்து உவந்து என்றும் பிரிக்கலாம்.

English Translation

O Vasudeva! The evil-minded Kamsa is angry with you. When you are alone he will capture you by deceit. I will not live thereafter. Mother’s words must always be heeded. I repeat, do not go out to

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்