விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கஞ்சன் விட்ட வெம் சினத்த*  களிறு அடர்த்த காளை என்றும்* 
  வஞ்சம் மேவி வந்த பேயின்*  உயிரை உண்ட மாயன் என்றும்*
  செஞ்சொலாளர் நீடு நாங்கைத்*  தேவ-தேவன் என்று என்று ஓதி* 
  பஞ்சி அன்ன மெல் அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பஞ்சி அன்ன மெல் அடியாள் - பஞ்சுபோன்று மென்மையான பாதங்களையுடைய என்மகளானவள்,
கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும் - கம்ஸனால் ஏவப்பட்ட கடூரமான கோபத்தையடைய (குவலயா பீடமென்னும்) யானையைத் தொலைத்த இளையோன் என்று சொல்லிக்கொண்டும்,
வஞ்சம் மேவி வந்த பேயின் - கபடத்தை மேற்கொண்டு வந்த பூதனையினுடைய
உயிரை உண்ட மாயன் என்றும் - பிராணனை முடித்த ஆச்சரியசக்தியுக்தன் என்று சொல்லிக்கொண்டும்,

விளக்க உரை

பஞ்சைப்போல் மென்மையான பாதம் கொண்டவள் "கஞ்சன் ஏவிய சினம் கொண்ட யானையைக் கொன்றவனே" ; "பூதனை உயிரையுண்ட வல்லவன்"; நன்மைப் பேச்சுடைய அந்தணர் வாழும் திருநாங்கூரில் உள்ளவனே" என்று பலவாறாகப் பாடுகிறாள்

English Translation

"Crue! Kamsa's Killer-elephant's killer lord, -O, Bull-spirited!" "Wonder-Lord who drank the milk and took the life of Ogress, pretty!" Deva-deva, Lord of Nangai living amidst the Vedic seers!' How my cotton-tender-footed daughter sings of parttan-Palli, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்