விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சந்தம் ஆய் சமயம் ஆகி*  சமய ஐம் பூதம் ஆகி* 
    அந்தம் ஆய் ஆதி ஆகி*  அரு மறை அவையும் ஆனாய்*
    மந்தம் ஆர் பொழில்கள்தோறும்*  மட மயில் ஆலும் நாங்கைக்* 
    கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சந்தம் ஆய் - சந்தஸ்ஸுக்கு நியாமகனாய்
சமயம் ஆகி - அவற்றின் வ்யவஸ்தைகளுக்கும் நியாமகனாய்
சமயம் ஐ பூதம் ஆகி - வ்யவஸ்தையோடு கூடின பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய்
அந்தம் ஆய் - உலக முடிவுக்கு காரணபூதனாய்
ஆதி ஆகி - உலக ஸ்ருஷ்டிக்கும் காரண பூதனாய்

விளக்க உரை

காயத்ரி, த்ரிஷ்டுப், ஜகதீ, அநுஷ்டுப், பங்க்தி என்றிப்படி சொல்லப்படுகிற சந்தஸ்ஸுக்களெல்லாம் நீயேயாகின்றாய்; ‘இத்தனை அக்ஷரங்கள் கூடினால் இன்ன சந்தஸ், இத்தனை அக்ஷரங்கள் கூடினால் இன்ன சந்தஸ்’ என்றிப்படி வ்யவஸ்தைகள் பண்ணினவனும் நீயே; ஸ்வபாவ நியமத்தோடு கூடின பஞ்சபூதங்களுக்கு நியாமகனும் நீயே; காரியப் பொருள்களெல்லாம் அழிந்து கிடந்த காலத்து எல்லாம் தன் பக்கலிலே வயித்துத் தானொருவனே என்னும்படி யிருக்குமவனும் நீயே. இவற்றையெல்லாம் விபாகம்பண்ணிக் காரியங்கொள்ள நினைத்த காலத்து இவற்றுக்கெல்லாம் காரணபூதனாக நின்றவனும் நீ: இவ்விதமாக வேதங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும் நீயே; இப்படிப்பட்ட நீ காவளம்பாடியில் வந்து ஸேவை ஸாதியாநின்றாய்; நீயே எமக்கு ரக்ஷகன் என்றாராயிற்று. சமயம் - வடசொல். (ஸமயமாவது – வியவஸ்தை.) மூன்றாமடியில் ‘மந்தாரம்’ என்ற வடசொல் மந்தம் எனச் சிதைந்து கிடக்கிறது. கந்தம் - பரிமளம்.

English Translation

O, Krishna! You are the chants their rules, the five elements, the beginning, the end, and the Vedas four. You reside amid the fragrant groves of Mandara trees in Nangur's kavalampadi. You are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்