விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏவிளங் கன்னிக்கு ஆகி*  இமையவர் கோனைச் செற்று* 
    காவளம் கடிது இறுத்துக்*  கற்பகம் கொண்டு போந்தாய்*
    பூவளம் பொழில்கள் சூழ்ந்த*  புரந்தரன் செய்த நாங்கைக் 
    காவளம்பாடி மேய*  கண்ணனே!  களைகண் நீயே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இள கன்னிக்கு ஆகி - இளம்பெண்ணாகிய ஸத்யபாமைப் பிராட்டிக்காக
ஏவு இமையவர் கோனை செற்று - யுத்தத்திலே தேவேந்திரனைப் பங்கப்படுத்தி
கடிது கா வளம் இறுத்து - சீக்கிரமாக நந்தவனத்தின் அழகை அழித்து
கற்பகம் - கல்பவ்ருக்ஷத்தை
கொண்டு போந்தாய் - (த்வாரகையில்) கொண்டு வந்து நட்டவனே!,

விளக்க உரை

ஏவிளங்கன்னிக்காகி – ஏவு - ‘இந்தப் பாரிஜாத விருக்ஷத்தை என் வீட்டு முற்றத்தில் கொண்டு நட்டுவிடு’ என்று ஏவின, இளங்கன்னிக்காகி – என்று முரைக்கலாம்.. அம்மரத்தைக் கருடனைக்கொண்டு போருமளவில் இந்திரன் அஃதறிந்து வஜ்ராயுதத்தைத் தீட்டிக்கொண்டு போர்புரிய வந்து பங்கப்பட்டுப் போயினன் என்பதும் இங்கு அறியத்தக்கது. அதுதோன்ற “இமையவர் கோனைச் செற்று” எனப்பட்டது. புரந்தரன் செய்த நாங்கை - ஸ்வர்க்க லோகத்திற்கு உண்டான ஏற்றம் பூலோகத்திற்கு முண்டாகவேணும் என்று கருதின தேவேந்திரன் ஸ்வர்க்கலோகத்துக் கட்டளையாகவே திருநாங்கூரை அமைத்தனன் என்று ஒரு இதிஹாஸ முண்டென்பர். புரந்தான் - வடசொல்

English Translation

O, Krishna! For the sake of the young Dame satyabhama, you subdued Indra, and transferred his garden-beauty wishing free kalipaka to her garden. You reside amid groves filled with fragrant flowers verily laid out by Purandara, Indra, in Nangur's Kavalampadi, you are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்