விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருத்து எழு வாலி மார்வில்*  ஒரு கணை உருவ ஓட்டி*    
    கருத்து உடைத் தம்பிக்கு*  இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*
    பருத்து எழு பலவும் மாவும்*  பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்* 
    கருத்தனே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உருத்து எழு வாலி மார்பில் உருவ - கோபங்கொண்டு கிளம்பி வந்த வாலியினுடைய மார்பிலே தைக்கும்படி
ஒரு கணை ஒட்டி - ஒரு பாணத்தைப் பிரயோகித்து (அவனைக் கொன்று)
கருத்து உடை தம்பிக்கு - தன் திருவுள்ளத்திற்குப் பொருந்தினவனான ஸுக்ரிவனுக்கு
இன்பம் கதிர் முடி அரசு அளித்தாய் - ஆனந்தகரமான ஒளிபொருந்திய கிரீடத்தையும் ராஜ்யத்தையும் கிருபைபண்ணினவனே!,

விளக்க உரை

உருத்து – ‘உரு’ என்று கோவத்திற்குப் பெயர்; அச்சொல்லடியாப் பிறந்த வினையெச்சம். ‘சற்று முன்னே சண்டைக்குவந்து தோற்றோடிப்போன பையல் மறுபடியும் வெட்கமின்றி வந்தானே!’ என்று கோபமூண்டு கிளம்பி வந்த வாலி என்றபடி. ஒருகணை உருவவோட்டி – வாலியின் மார்பில் எத்தனையோ வீரர்கள் அம்புகளைப் பிரயோகித்ததுண்டு; அவையெல்லாம் வாய் மடிந்துபோயின வத்தனையொழிய ஒன்றேனுங் காரியஞ்செய்யவில்லை; இராமபிரானுடைய கணையே காரியஞ்செய்ததுபற்றி ‘ஒருகணை’ எனப்பட்டது. கருத்துடைத்தம்பிக்கு – ‘வாலி ஆண்ட ராஜ்யத்தை நாம் ஆளவேணும்’ என்ற கருத்துடைய ஸுக்ரிவனுக்கு – என்றாவது, தன்னோடு ஸ்நேஹங்கொண்டதனால் ஒத்த கருத்தையுடையனான ஸுக்ரிவனுக்கு என்றாவது உரைக்கலாம். கர்த்தா என்னும் வடசொல் கருத்தன் எனத்திரிந்து விளிபுருபேற்றது.

English Translation

O, Krishna, you shot an arrow piercing Vali's chest, then gave the sweet nectar of crowned kingship to his younger brother. You reside amid groves that swell with nectar of ripe jackfruit and mango fruit that drop from trees. In Nagur's kavalampadi. You are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்