விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தந்தம் மக்கள் அழுது சென்றால்*  தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்* 
  வந்து நின்மேற் பூசல் செய்ய*  வாழ வல்ல வாசுதேவா!*
  உந்தையார் உன்திறத்தர் அல்லர்*  உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்* 
  நந்தகோபன் அணி சிறுவா!*  நான் சுரந்த முலை உணாயே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தம் தம் மக்கள் - தங்கள் தங்கள் பிள்ளைகள்;
அழுது - அழுதுகொண்டு;
சென்றால் - (தம்தம் வீட்டுக்குப்) போனால்;
தாய்மார் ஆவார் - (அக்குழந்தைகளின்) தாய்மார்கள்;
தரிக்க கில்லார் - பொறுக்க மாட்டாதவர்களாய்;

விளக்க உரை

கண்ணபிரான் தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட போனால் எல்லாப் பிள்ளைகளையும் போல விராமல் அப்பிள்ளைகளை அடித்துக் குத்தி விளையாடுவனாதலால் அழுதுகொண்ட வீட்டுக்குச் செல்லும் அப்பிள்ளைகளைக் கண்ட தாய்மார்கள் மனம் பொறாமல் நொந்து அப்பிள்ளைகளைக் கண்ணுங் கண்ணீரும் அழைத்துக் கொண்டுவந்து காட்டி இவன்மேலே பழி சொல்லிப் பிணங்கினால் இவன் அதனால் சற்றும் இளைப்புக் கொள்ளாமல் அதையே த்ருப்தியாகக் கொண்டு ஸந்தோஷிப்பனென்பதைக் காட்டுகிறார் - முதலிரண்டடியால் (வாசுதேவா) பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ! யென்கிறார். உன் + தந்தையார் = உந்தையார்; மரூஉ மொழி.

English Translation

The mothers can’t stand it when their children return home wailing; they come here and complain about you. O Vasudeva who lives as you wish, your father doesn’t correct your ways; nor am I able do an

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்