விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாஅளந்து உலகம் முற்றும்*  தட மலர்ப் பொய்கை புக்கு* 
    நாவளம் நவின்று அங்கு ஏத்த*  நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்* 
    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும் நாங்கைக்* 
    காவளம் பாடிமேய*  கண்ணனே! களைகண்நீயே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகம் முற்றும் தாவளந்து உலகமடங்கலும் தட்டித்தரிந்து
தடம் மலர் பொய்கை புக்கு பெரிதான பூக்களையுடைத்தான ஒரு தடாகத்தில் இறங்கி
அங்கு அங்கு (முதலையினால் கவ்வப்பட்டு)
நா வளம் நவின்று ஏத்த நாவுக்கு அலங்காரமான திருநாமங்களை சொல்லித்துதிக்க
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் கஜேந்திராழ்வானுடைய அச்சத்தை போக்கினவனே!,
மா வனம் பெருகி மிக்க செல்வமானது அதிகமாகி

விளக்க உரை

கஜேந்திராழ்வானைக் காத்தருளினதுபோல எம்போலியரையும் பஞ்சேந்திரியங்களாகிற ஐந்து முதலைகளின் வாயில் நின்று விடுவித்துக் காத்தருள்வதற்காகத் திருநாங்கூரில் ஒரு பகுதியான திருக்காவளம்பாடியென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் பிரானே! எமக்கு நீயே ரக்ஷகனாகவேணும்; நீ தவிர வேறொருவனையும் யாம் ரக்ஷகனாகவுடையோமல்லோம் என்றாராயிற்று.

English Translation

O, Krishna! You took the whole Earth in one stride, you entered the lotus tank and saved the chanting devotee elephant! You reside with knowledge-wealthy Vedic seers in Nangur's Kavalampadi, You are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்