விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பாவமும் அறமும் வீடும்*  இன்பமும் துன்பம் தானும்* 
  கோவமும் அருளும் அல்லாக்*  குணங்களும் ஆய எந்தை*
  'மூவரில் எங்கள் மூர்த்தி*  இவன், என முனிவரோடு* 
  தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாவமும் - பாபமும்
அறமும் - புண்யமும்
வீடும் - மோக்ஷமும்
இன்பமும் - ஸுகமும்
துன்பம் தானும் - துக்கமும்
 

விளக்க உரை

செய்யக்கூடாதென்று சாஸ்திரங்களில் மறுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதாகிற பாவமென்ன, செய்யவேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ள நற்காரியங்களைச் செய்தலாகிற புண்யமென்ன இவையிரண்டும் எம்பெருமானிட்ட வழக்கு எல்லாவற்றுக்கும் மேற்பட்டதான மோக்ஷஸுகமும் மற்றமுள்ள ஸாமாந்ய ஸுகங்களுமெல்லாம் அவனிட்ட வழக்கு மனங்கலங்கி இருத்தலாகிற கோவமும், தெளிந்திருத்தலாகிற அருளும் மற்றும் ஸத்வரஜன் தமோ குணங்களும் அவனிட்ட வழக்கு. இப்படி ஸர்வநிர்வாஹானான எம்பெருமான் நாய் கூர்த் திருமணிக்கூடத்திலுள்ளான். அரி, அயன், அரன் என மூன்று மூர்த்திகளிருந்தாலும் ஸாத்விகர்கட்கு ஆச்ரயிக்கவுரிய மூர்த்தி விஷ்ணுமூர்த்தியேயென்று தெளிந்து ஸநகாதி மஹர்ஷிகளும் ப்ரஹ்மாதி தேவர்களும் வந்து ஆச்ரயிக்கப் பெற்ற தலமிது.

English Translation

Good karmas and bad karmas, freedom and pleasure, forgiveness and anger, and all other qualities, -these are my Lord, the excellent one of three forms. He resides at Nangur in Tirumank-kudam worshipped by gods and bards.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்