விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சங்கையும் துணிவும் பொய்யும்*  மெய்யும் இத் தரணி ஓம்பும்* 
  பொங்கிய முகிலும் அல்லாப்*  பொருள்களும் ஆய எந்தை*
  பங்கயம் உகுத்த தேறல்*  பருகிய வாளை பாய*   
  செங்கயல் உகளும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சங்கையும் - ஸந்தேஹமும்
துணிவும் - நிச்சயமும்
பொய்யும் - அஸத்யமும்
மெய்யும் - ஸத்யமும்
இத் தரணி ஓம்பும் - இப்பூமண்டலத்தை ரக்ஷிக்கின்ற

விளக்க உரை

சங்கையாவது – ‘இது இப்படியோ அப்படியோ?’ என்று ஸந்தேஹப்படுதல். துணிவாவது – ‘இது இப்படிதான்’ என்று நிச்சயித்தல் ஆக, ஸம்சயரூபமான ஞாத்திற்கும் நிச்சயரூபமான ஞானத்திற்கும் எம்பெருமானே நிவாஹகன். உலகத்திற்கு ஹிதமான மெய்யும் அஹிதமான பொய்யும் அவனே. (அதாவது – மெய்யர்க்கே மெய்யனாகும், பொய்யர்க்கே பொய்யனாகும் - என்கை.) கைம்மாறு கருதாமல் பூமியை ரக்ஷிக்கின்ற மேகங்களும் மற்றும் இடி மின் முதலியவைகளும் அவனிட்ட வழக்கு. இப்படி ஸர்வத்துக்கும் நியாமகனாயிருக்கும் எம்பெருமான் நாங்கூர்த் திருமணிக்கூடத்தான்

English Translation

Doubt and certainly, truth one faisity, the spirit of the forms on Earth, and the forms themselves, -all these are my Lord, who resides at Nangur in Tirumanik-kudam, Where the Valai fish and red kayal fish drink the nectar spilled by lotuses and dance enchanted.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்