விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாத்தொழில் மடங்கச் செற்று*  மருது இற நடந்து* வன் தாள் 
  சேத்தொழில் சிதைத்துப்*  பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*
  நாத்தொழில் மறை வல்லார்கள்*  நயந்து அறம் பயந்த வண் கைத்* 
  தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மருது இற நடந்து - மருதமரங்கள் இற்றுமுடிந்து விழும்படி தவழ்நடை கற்றவனாயும்
வல் தாள் சே தொழில் சிதைத்து - வலிய கால்களையுடைய (ஏழு) ரிஷபங்களினுடைய வியாபாரத்தை பங்கப்படுத்தி
பின்னை - நப்பின்னைப் பிராட்டியினுடைய
செவ்வி தோள் - அழகிய தோள்களோடே
புணர்ந்த - கலவி செய்தவனாயுமுள்ள

விளக்க உரை

ஜ்ஞாநாநுஷ்டாநங்களால் நிறைந்த வைதிகர்கள் வாழுமிடம் திருநாங்கூர் என்பன பன்னடிகள். ஈற்றடியில் “தீத்தொழில் பயிலும்” என்ற விடத்து விரோதாபாஸாலங்காரம் அறியத்தக்கது. ‘தீத்தொழில்’ என்பதற்கு தீயதொழில் (கெட்ட காரியம்) என்றும் பொருள்படுமாதலால் அதனை முந்துற விரோதப்பொருளாகக் கொள்க; வேதமோதித் தருமங்களை யனுட்டிப்பவர்கள் என்று மூன்றாமடியில் சொல்லிவைத்து, அன்னவர்கள் தீயதொழிலைப் பயில்கின்றனர் என்பது விரோதம்; ஔபாஸநம் முதலிய அன்நிகாரியங்களை நடத்துபவர்கள் என்று பொருள்கொண்டு விரோதத்தை அகற்றுக; ஆகவே விரோதாபாஸாலங்காரம் இது.

English Translation

The Lord who ripped the horse Kesin's jaws, toddled between Marudu trees, and subdued seven bulls for the embrace of Nappinnai, resides at Nangur in Tirumank-kudam where well trained Vedic seers with Dharma and generously feed the sacred fires.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்