விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*  எண் திசையும் மண்டலமும் மண்டி*
    அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*  முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*
    ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*  ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்* 
    சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எண் திசையும் மண் தலமும் அண்டம் மண்டி - எட்டுத் திக்குக்களிலும் எல்லாப் பூமியிலும் அண்டத்திலும் பரவி
மோழை யெழுந்து - மோழை கிளம்பி
ஆழி மிகும் - கடல் பெருகும்படியான
ஊழி வெள்ளம் - பிரளயப்பெரு வெள்ளத்தை
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் - முன்பொருகால் திருவயிற்றில் அடக்கிக்கொண்டஎமது ஸ்வாமியானவான்

விளக்க உரை

“பாதா:ப்ரத்யந்தபர்வதா:” என்ற அமா நிகண்டின்படி, பெரியமலைக்கு அடுத்துள்ள சிறுமலைகள் பாதங்களாகச் சொல்லப்படுதலால், இங்கே ‘தாள்வரையும்’ என்றதற்கு ‘பக்கத்துச்சிறு மலைகளையுடைய பெரிய மலைகளும்’ என்று பொருள் கூறப்பட்டது. மோழையெழுந்து - கீழ் வெள்ளம் மேற்கிளர்தல் மோழையெழுச்சியெனப்படும். மோழை – கீழாறு. அகடு – கீழ்வயிறு. மூர்த்தி - ஸ்வாமி.

English Translation

Through age after age, the Vedic seers tore the Vedas on the seams of their lips in fall gem-mansions around Nangur. See, the Lord who stored the seven worlds, the seven mountains, the seven continents, the eight Quarters and all else in the Universe in the seam of his lips, resides in his temple of Tirutetri Ambalam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்