- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஆண்களை எளிதில் வசப்படுத்தும் வல்லமைவாய்ந்த பெண்கள் மலிந்திருப்பதை வருணிப்பதும் நகர்ச்சிறப்பை வருனித்தலாதலால் அதனை வருணிக்கிறார் பின்னடிகளில். திருநாங்கூரில் வீதிகள்தோறும் மலைமலையான மாடங்கள் வரிசை வரிசையாக இடைவிடாது ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்றன; அப்படிப்பட்ட வீதிகளில், மதுரமான பேச்சையுடைய பெண்கள் தங்களுடைய புருவநெறிப்பினால் ஆண்பிள்ளைகளின் மனத்தைக் கவர்ந்துகொள்ளுகின்றனராம்; இப்படிப்பட்ட அழகிற்சிறந்த மாதர் வாழப்பெற்ற திருநாங்கூரிலுள்ளது திருத்தெற்றியம்பலம். குலையிலங்கும் - ‘மேகலை’ என்ற சொல் முதற்குறையாகிக் கலை என்று கிடக்கிறது என்று கொள்ளலாம். குலை – வஸ்த்ரமுமாம். “முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப” என்பதனால் அப்பிராட்டிமாருடைய கலவி சொல்லப்பட்டதென்க. முகத்து இரண்டு சிலை – விற்போன்ற புருவங்கள் என்னவேண்டுமிடத்து, வில் என்றே கூறினது ரூபகாதிசயோக்தியாம்.
English Translation
See, the Lord with long mountain-like arms who rubs against the breast-ornaments and pearl necklaces of slim-waisted lotus-dame lakshmi and pearly-smile dark-eyed cowherd-dame Nappinnai without tiring, is our senkanmai who resides at Nangur, -where mountain-like mansions stand in rows on either side of the streets, where the hearts of men-talk get entangled between the twin bow-like eyebrows of sweet tongued dames, -in his temple of Tirutetri Ambalam.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்